தனது கடைசி டி-20 போட்டியில் 71 ரன்கள் அடித்ததன் மூலமாக ஜிம்பாவே அணியின் கேப்டனாக இருந்த ஹாமில்டன் மசகட்ஸா சாதனை படைத்துள்ளார்.
வங்க தேசத்தில் முத்தரப்பு டி-20 தொடர் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் வங்கதேசம் ,ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாவே அணிகள் விளையாடி வருகின்றது.
இதுவரை நடைபெற்ற போட்டியில் பெற்ற வெற்றிகளை வைத்து வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இந்த முத்தரப்பு தொடரோடு ஜிம்பாவே அணியின் கேப்டனாக இருந்த ஹாமில்டன் மசகட்ஸா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறாத நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் அணியுடன் ஜிம்பாவே அணி மோதியது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் அடித்தது.ஆப்கான் அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 61 ரன்கள் அடித்தார்.ஜிம்பாவே அணியின் பந்துவீச்சில் கிறிஸ்டோபர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.பின்னர் களமிறங்கிய ஜிம்பாவே அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 156 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.
ஆனால் இந்த போட்டியுடன் ஜிம்பாவே அணியின் கேப்டனாக இருந்த ஹாமில்டன் மசகட்ஸா 71(42) ரன்கள் அடித்தார்.இவர் இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.அதாவது தனது இறுதி டி-20 போட்டியில் விளையாடும் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன் 71 ரன் தான்.அதுவும் மசகட்ஸா 27 பந்துகளில் அரைசதம் அடித்தார்.தனது இறுதிப்போட்டியில் வெற்றியுடன் சென்றுள்ளார் மசகட்ஸா .மேலும் தொடர்ச்சியாக டி-20 போட்டிகளில் வெற்றி பெற்று வந்த ஆப்கான் அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஜிம்பாவே அணி.
சர்வதேச போட்டிகளில் ஹாமில்டன் மசகட்ஸாவின் பங்களிப்பு:
டெஸ்ட் போட்டிகள் : 38 ரன்கள்: 2223 சதம் : 5 அரைசதம் : 8
ஒருநாள் போட்டிகள் : 209 ரன்கள்: 5658 சதம் : 5 அரைசதம் : 34
டி-20 போட்டிகள் : 66 ரன்கள்: 1662 சதம் : – அரைசதம் : 11
டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்…
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…