நான் பந்து வீசியிருந்தால் ராஜஸ்தான் 40 ரன்களில் ஆல்-அவுட் ஆகியிருக்கும்…விராட் கோலி நக்கல் பேச்சு.!!

virat kohli RCB

நேற்று  (மே 14) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 60-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெங்களூர் பந்துவீச்சாளர்கள் ராயல்ஸ் அணியை 10.3 ஓவர்களில் 59 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தனர்.

59 ரன்கள் எடுத்து ஆல் -அவுட் என்பது ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது குறைந்த பட்ச ரன் ஆகும். இந்நிலையில், இந்த போட்டி குறித்து பெங்களூர் அணி வீரர்கள் டிரஸ்ஸிங் ரூமில் விராட் கோலி சில சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்தார்.

அப்போது குறிப்பாக, “நான் மட்டும் பவுலிங் செய்திருந்தால் ? ராஜஸ்தான்  வீரர்கள் 40 ரன்களுக்கு மொத்தமாகவே  ஆட்டமிழந்திருப்பார்கள்” என நகைச்சுவையாக பேசியுள்ளார். மேலும் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி புள்ளிவிவர பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்