#IPL2022 : ஹைதிராபாத் அணியை வீழ்த்தி ‘த்ரில்’ வெற்றி பெற்றது குஜராத்.!
20 ஓவரில் 199 ரன்கள் எடுத்து ஹைதிராபாத் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியும் , சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதிராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 65 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் விருத்திமான் சஹா 68 ரன்கள் விளாசினார் . பின்னர் இறுதியில் ராகுல் திவட்டியா 21 பந்துகளில் 40 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார்.
கடைசி வரை காலத்தில் ரசித் கான் 11 பந்துகளில் 31 ரன்கள் விளாசி அணியை திரில் வெற்றி பெற செய்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி ஹைதிராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.