பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய குஜராத் அணி தொடக்கத்தில் சில விக்கெட்களை விட்டாலும் அபாரமாக விளையாடி ராஜஸ்தான் அணிக்கு பெரிய இலக்கை வைத்தது.
சாய் சுதர்சன் மற்றும் பட்லர் இருவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து அடுத்ததாக 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.
பெரிய இலக்கை துரத்திக்கொண்டு இருந்த ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட் இழந்து சற்று தடுமாறியது என்று சொல்லலாம். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6, நிதிஷ் ராணா 1, ரியான் பராக் 26, துருவ் ஜூரல் 5 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் 7.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. இருப்பினும், களத்தில் சஞ்சு சாம்சன், ஷிம்ரான் ஹெட்மியர் இருவரும் களத்தில் நின்று கொண்டு அதிரடியாக விளையாடி கொண்டு இருந்தார்கள்.
தோல்வியை நோக்கி கொண்டு சென்றிருந்த ராஜஸ்தான் அணியை வெற்றிப்பாதைக்கு இருவரும் இணைந்து கொண்டு சென்றுகொண்டு இருந்தார்கள். அந்த சமயத்தில்தான் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 41 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக அணியின் வெற்றியின் நம்பிக்கை மீண்டும் உடைந்தது என்று சொல்லலாம். அவர் ஆட்டமிழந்ததற்கு பிறகு வந்த சுபம் துபே 1 ரன்கள் எடுத்து வந்த வேகத்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன் காரணாமாக ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 37 பந்துகளில் 93 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் அதிரடி ஹிட்டர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷிம்ரான் ஹெட்மியர் இருவரும் நின்று கொண்டு இருந்தார்கள். அப்போது ஷிம்ரான் ஹெட்மியர் சிக்ஸர் பவுண்டரி என விளாசி அணியை வெற்றிபெற வைக்க போராடி கொண்டு இருந்தார். அரை சதம் விளாசியாக அவரும் 15.ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று 52 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ராஸ்தான் தோல்வி என்பது உறுதியாகிவிட்டது.
இறுதியாக 19.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் ராயல் அணியால் 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக இந்த போட்டியில் குஜராத் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும், குஜராத் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.