GT vs PBKS: வெற்றி யாருக்கு? பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு.!
அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 18வது சீசனில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி இதுவாகும். அகமதாபாத் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இப்பொது (7 மணி அளவில்) டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய போகிறது.
ஐபிஎல் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், குஜராத் டைட்டன்ஸ் 3 முறையும், பஞ்சாப் கிங்ஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கோப்பை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர், இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.
சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இதில், ஷ்ரேயாஸ் ஐயர் கோப்பை வென்ற போதிலும், KKR அணி அவரை தக்க வைத்துக் கொள்ளவில்லை. இருப்பினும், இம்முறை ஐயர் பஞ்சாபிற்காக முதல் பட்டத்தை வெல்வதில் கவனம் செலுத்துவார்.
வீரர்கள்
குஜராத் டைட்டன்ஸ் அணி :
கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான அணியில் ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன், ஷாருக் கான், ராகுல் தெவதியா, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அர்ஷத் கான், ரஷீத் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி :
கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியில் பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல், சூர்யான்ஷ் ஷேட்ஜ், அஸ்மதுல்லா உமர்சாய், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.