ஹைதராபாத் அணியை வீழ்த்திய குஜராத் – கோபமடைந்த SRH அணி பயிற்சியாளர் முத்தையா முரளிதரன்.., வைரல் வீடியோ உள்ளே..!
ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சன் ரைசஸ் ஹைதராபாத் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற 40 ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் மார்கோ ஜான்சன் 22 ரன்கள் எடுக்க வேண்டியிருந்துள்ளது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ரஷீத் கான் மார்கோ ஜான்சனை முறியடித்து விட்டார்.
இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் அவ்விடத்திலேயே கோபமடைந்து சத்தமிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Never seen Murali this angry lol pic.twitter.com/axLGN2UMOJ
— yang yoo (@GongRight) April 27, 2022