ருத்ர தாண்டவம் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Gujarat Titans

குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் யை வீழ்த்தியது.

ஐபிஎல் தொடரின் இன்றைய  48வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்(14), ஜோஸ் பட்லர்(7) ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றத்தை தந்தனர்.கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.

அதன் பின்பு வந்த அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.5 ஓவர்களில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரஷித் கான் 3 விக்கெட்களையும்  நூர் அகமது 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.முகமது ஷமி,ஹர்திக் பாண்டியா மற்றும் ஜோசுவா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

குஜராத் டைட்டன்ஸ்:

119 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய டைட்டன்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.தொடக்க ஆட்டக்கார்களான சுப்மான் கில், விருத்திமான் சாஹா ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும் பறக்கவிட்டனர்.

சுப்மான் கில் அதிரடியாக விளையாடி 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க விருத்திமான் சாஹா 41 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதன் பின்பு களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா  15 பந்துகளில 39 ரன்கள் எடுத்தார்.

13.5 ஓவர்கள் முடிவில் 119 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் யை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்