ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதுகிறது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 24-வது போட்டியாக இன்று ராஜஸ்தான் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் தற்போது ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால், ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரின் இந்த வாரத்தில், ரைவல்ரி வாரம் தொடங்கியுள்ளதால் ஐபிஎல் தொடரில் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு போட்டியாக இந்த போட்டி இருந்து வருகிறது. இரண்டு அணிகளிலும் அடித்து விளையாடும் வீரர்கள் இருப்பதால் இந்த போட்டியில் பவுண்டரிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் மழையின் காரணமாக சற்று நேரம் டாஸ் தள்ளி சென்றது. இதன் காரணமாக 7.30 மணிக்கு வழக்கமாக தொடங்கும் போட்டி தற்போது ஐபிஎல் தொடரில் கேப்டனாக தனது 50-வது போட்டியில் சஞ்சு சாம்சன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.
ராஜஸ்தான் அணி வீரர்கள் :
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்
குஜராத் அணி வீரர்கள் :
ஷுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், அபினவ் மனோகர், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், நூர் அகமது, மோகித் சர்மா
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…