முதல் முறையாக 10 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி.!!

Gujarat Titans

நேற்று நடந்த ஐபிஎல் 2023 இன் குவாலிஃபையர் 1 – இல் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 172 ரன்கள் அடித்தது.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியை குஜராத் அணி மொத்தமாக 157 ரன்களுக்குள் தனது அணைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம்  குஜராத் ஒரு ஆட்டத்தில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் இழந்த இந்த சீசனில் எந்த போட்டியிலும்  இல்லை.

நேற்று போட்டியின் இறுதி ஓவரை எதிர்கொள்வதற்குள் குஜராத் அணி 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன் காரணமாகவே அவர்களின் தோல்வி உறுதியானது, ஆனால் இறுதிப் பந்தில் தீபக் சாஹரின் அற்புதமான ரன்னிங்-கேட்ச் ஆட்டத்தின் இறுதிப் பந்து வீச்சில் குஜராத் அணி அவர்களின் இறுதி விக்கெட்டை இழந்தது.

எனவே, இதன் மூலம் அந்த அணி களத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த முதல் நிகழ்வாக இது அமைந்தது. மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir