ஐபிஎல் 2024 : தேவாட்டியா அதிரடியில் எளிதில் இலக்கை துரத்திய குஜராத் அணி !!

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : நடைபெற்ற இன்றைய இரவு போட்டியில் பஞ்சாப் அணியை, குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின்37-வது போட்டியாக இன்று இரவு நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி முல்லான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திரா சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

இதனால் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாம் கர்ரணும், பிரப்சிம்ரனும் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருந்தாலும் இவர்களது கூட்டணியில் 50 ரன்கள் சேர்த்த பிறகு பிரப்சிம்ரன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு பஞ்சாப் அணியில் எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாமல் அடுத்தடுத்து அவர்களது விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள்.

இதனால் பஞ்சாப் அணி சரியான கூட்டணி அமையாமலும் பொறுப்பான பேட்ஸ்மேன்களின் ஆட்டம் அமையாமலும் 20 ஓவர்களில் 10 விக்கெட்டை இழந்து வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் 35 ரன்கள் எடுத்திருந்தார். குஜராத் அணியில் அதிகப்பட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இதனால் எளிய இலக்கான 143 ரன்களை எடுக்க குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரரான சாகா 13 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து அணியின் கேப்டனான சுப்மன் கில் பொறுப்புடன் விளையாடி 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவருடன் கூட்டணி அமைத்த தமிழக வீரரான சாய் சுதர்சன் ஒரு பக்கம் பொறுமையான விளையாட்டை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

மேலும், நன்றாக விளையாடி கொண்டிருந்த சாய் சுதர்சனும், சாம் கர்ரன் பந்தில் போல்டாகி வெளியேறினார். டேவிட் மில்லர், ஓமர்சாய் என முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து நடையை கட்டினர். இலக்கு அதிகம் இல்லை என்பதால் விக்கெட்டுகள் இழந்தாலும் குஜ்ராத் அணிக்கு பெரிதாக போட்டியில் அழுத்தம் ஏற்படாமல் இருந்தது.

அதிலும் அப்போது களத்தில் தேவாட்டியாவும், தமிழக வீரர் ஷாருக் கானும் நின்று வெற்றிக்காக அதிரடியாக போராடினார்கள். குறிப்பாக தேவாட்டியாவின் அதிரடியில் மிக விரைவில் போட்டியை முடித்தது குஜராத் அணி. இதனால் 19.1 ஓவரில் 146 ரன்கள் அடித்து குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை பெற்றது.

குஜ்ராத் அணியில் அதிகபட்சமாக தேவாட்டியா 18 பந்தில் 36 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல் பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி இருந்தார். இந்த தொடரில் இதற்க்கு முன் குஜராத் அணி, பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

RCBvsDC : டாஸ் வென்று டெல்லி பௌலிங் தேர்வு..அதிரடி காட்டுமா பெங்களூர்?

பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…

7 minutes ago

ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!

சென்னை :  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…

57 minutes ago

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

1 hour ago

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

2 hours ago

கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…

2 hours ago

அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை? புதிய பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் அறிவிப்பு இதோ…

சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

2 hours ago