லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்..இர்பான் பதான் அணியுடன் குஜராத் ஜெயண்ட்ஸ் இன்று மோதல்.!

Bhilwara Kings

2023 லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர், இந்தியாவின் ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ இன்டர்நேஷனல் மைதானத்தில் நவம்பர் 18ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெரும் இந்த தொடரில் 15 லீக் போடீக்ளா உள்ளன. இதில் 3 போட்டிகள் முடிந்துள்ளது.

மூன்றாவது போட்டியில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் நான்காவது ஆட்டத்தில் இர்பான் பதான் தலைமையிலான பில்வாரா கிங் அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்… ரெய்னாவின் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.!

பில்வாரா கிங்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் இந்தியா கேப்பிடல்ஸை தோற்கடித்தது. இதனால் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் 2023 புள்ளிகள் அட்டவணையில் 2 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.445 உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

அதேபோல, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் மணிப்பால் டைகர்ஸுக்கு எதிராக மோதியது. இதில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதால், நிகர ரன் ரேட் -0.500 உடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.  பில்வாரா கிங்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகள் டி20 போட்டிகளில் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று.! கத்தாரிடம் இந்தியா தோல்வி.!

இதில் பில்வாரா கிங்ஸ் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. குஜராத் ஜெயண்ட்ஸ் இன்னும் ஒரு வெற்றியைக் கூடப் பதிவு செய்யவில்லை. இந்த மூன்று போட்டிகளிலும் அதிகபட்சமாக பில்வாரா கிங்ஸ் 222 ரன்களும், குஜராத் ஜெயண்ட்ஸ் 165 ரன்களும் எடுத்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பில்வார கிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்