ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதுகிறது.
ஐபிஎல் தொடரில் இன்றைய 40-தாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் இதற்கு முன் இந்த இரு அணிகளும் மோதும் பொழுது ஒரு மோசமான தோல்வியை குஜராத் அணி பதிவு செய்திருந்தது.
அதனால் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் அணி, டெல்லி அணிக்கு திருப்பி கொடுக்குமா என்ற எதிர்ப்பார்ப்புடன் குஜராத் அணி ரசிகர்கள் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். மேலும், டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் மீண்டு வருவதற்கு இந்த போட்டியை கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருவதால் இந்த போட்டியை டெல்லி அணி வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் டெல்லி அணியின் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இந்த இரு அணிகளும் தலா 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் 2 முறை குஜராத் டைட்டன்ஸ் அணியும், 2 முறை டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதை உயரத்துவதற்கு இரண்டு அணிகளும் கடுமையாக போராடுவார்கள் என்பது நமக்கு தெரிந்ததே.
டெல்லி அணி வீரர்கள்:
டேவிட் வார்னர், பிரித்வி ஷா, அபிஷேக் போரல், ரிஷப் பந்த்(கேப்டன் /விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், லலித் யாதவ், ஜே ரிச்சர்ட்சன், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது.
குஜராத் அணி வீரர்கள் :
ஷுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், அபினவ் மனோகர், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், நூர் அகமது, மோகித் சர்மா
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…