GT vs PBKS: பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிரட்டிய பஞ்சாப்.! தோல்வியை தழுவிய குஜராத்.!
குஜராத் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 18வது ஐபிஎல் சீசனை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி.

அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பஞ்சாப் ஷுப்மான் கில்லின் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது.
குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை பதம்பார்த்த பஞ்சாப் அணி 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியால் இலக்கை எட்டிப் பிடிக்க முடியவில்லை.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில், அறிமுக வீரர் பிரியான்ஷ் ஆர்யா 23 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக 97 ரன்கள் குவித்தார். அவரைத் தவிர, ஷஷாங்க் சிங் 16 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 44 ரன்களையும் குவித்தனர். பிரப்சிம்ரன் சிங் 5 ரன்களும், அஸ்மதுல்லா உமர்சாய் 16 ரன்களும், மார்க் ஸ்டோய்னிஸ் 20 ரன்களும் எடுத்தனர்.
ஒருவழியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து, 244 எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை குஜ்ராத் அணிக்கு நிர்ணயம் செய்தது. குஜ்ராத் அணிக்காக, சாய் கிஷோர் மூன்று விக்கெட்டுகளுடன் நட்சத்திர பந்து வீச்சாளராக இருந்தார், ரஷீத் கான் மற்றும் காகிசோ ரபாடா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர், பஞ்சாப்பின் இமாலய இலக்கை நோக்கி களமிங்கிய குஜ்ராத் அணி சார்பாக, சாய் சுதர்சன் நிதானமாக விளையாடி 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், அவருக்கு பதிலாக இம்பாக்ட் பிளேயராக வந்த ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தவுடன் இரண்டு சிக்ஸர்களையும் ஒரு பவுண்டரியையும் அடித்தார்.
பின்னர், ஜோஸ் பட்லர் 33 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை அடித்தார். சுப்மன் கில் 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த அசத்தினார். அஸ்மதுல்லா 15 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். பிரப்சிம்ரன் 8 பந்துகளில் வெறும் 5 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற 6 பந்துகளில் 27 ரன்கள் தேவை. ப்பட்டது. இறுதி வரை விளையாடி, 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.