GTvsRR : மிரட்டிய மில்லர்..குஜராத் அதிரடி பேட்டிங்..! ராஜஸ்தானுக்கு இதுவே இலக்கு..!
ஐபிஎல் தொடரின் இன்றைய GT vs RR போட்டியில், முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 177/7 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்று 2 போட்டிகள் நடைபெறுகிற நிலையில், 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா, அதிரடியாக ஒரு பவுண்டரி அடித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு, கில் மற்றும் சுதர்சன் அணிக்கு வலு சேர்த்த நிலையில் சுதர்சன் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் தங்களது அதிரடி ஆட்டத்தால் குஜராத்தின் பந்துகளை பறக்கவிட்டனர்.
இறுதியில் அபினவ் மனோகர் ஆட்டமிழக்க, ராகுல் தெவாடியா மற்றும் அல்சாரி ஜோசப் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்துள்ளது. குஜராத் அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 46 ரன்களும், சுப்மன் கில் 45 ரன்களும், ஹர்திக் பாண்டியா 28 ரன்களும், அபினவ் மனோகர் 27 ரன்களும் குவித்துள்ளனர்.
ராஜஸ்தான் அணியில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ராஜஸ்தான் அணி 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.