GTvSRH : டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு !
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் க்கு இடையேயான போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் லீக் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் 62வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேறும். அதே சமயம் ஐதராபாத் அணி இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும் என்ற சூழலில் மோதுகின்றன. அந்த வகையில், இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்): ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா (வ), சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேட்ச்), டேவிட் மில்லர், தசுன் ஷனகா, ராகுல் தெவாடியா, மோகித் சர்மா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கேட்ச்), ஹென்ரிச் கிளாசென்(டபிள்யூ), அப்துல் சமத், சன்விர் சிங், மயங்க் மார்கண்டே, மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹக் ஃபரூக்கி, டி நடராஜன்