GTvsLSG: முதல்முறையாக கேப்டன்களாக மோதும் பாண்ட்யா சகோதரர்கள்…வெற்றிபெறப்போவது யார்..?
இன்று மதியம் 3.30 மணிக்கு நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் கேப்டன்களாக பாண்டியா சகோதரர்கள், ஹர்திக் மற்றும் க்ருனால் ஆகியோர் நேருக்கு நேர் மோத உள்ளனர்.
ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் வழக்கமான கேப்டனாக இருப்பார். அதே வேளையில், காயம் காரணமாக கே.எல்.ராகுல் இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியதால் மீதமுள்ள போட்டிகளில் அவரது சகோதரர் க்ருனால் பாண்டியா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
IPL 2023: GT up against LSG in clash of Pandya brothers
Visual Story: https://t.co/nDh0RJ8Czj pic.twitter.com/kfYLKOX5RM
— TOI Sports (@toisports) May 6, 2023
ஹர்திக் இந்திய அணிக்கு பலமுறை கேப்டனாக இருந்து, இரண்டாவது ஆண்டாக ஐபிஎல்லில் குஜராத் அணியை வழிநடத்தி வருகிறார். க்ருனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் பரோடா அணியை வழிநடத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் அணிக்கு கேப்டனாக பதவியேற்ற முதல் சகோதரர்கள் இவர்கள் இருவரும் தான்.
1st match of the day. What bet can we make?#IPL2023 #GTvLSG #bettingtips
More info ???????????? pic.twitter.com/zz7ORVY9Kh
— Big Betting Club ???? (@big_bet_club) May 6, 2023
எனவே இன்று நடைபெறும் இந்த போட்டியில் ஹர்திக் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வேற்றுப்பெறுமா..? அல்லது க்ருனால் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வேற்றுப்பெறுமா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கு முன்பு இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேராக 3 போட்டிகளில் மோதிய நிலையில், 3 முறையும் குஜராத் அணி தான் வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The Titans are a dominant side out of the two when it comes to H2H stats ????????#GTvLSG #IPL2023 #Insidesport #CricketTwitter pic.twitter.com/FImXD3SyiJ
— InsideSport (@InsideSportIND) May 7, 2023