இன்றைய போட்டியில் குஜராத் அணிக்கு 171 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 43வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடி வருகிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களுரு அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான கேப்டன் டு பிளெசிஸ் டக் அவுட்டானார். இதன்பின் விராட் கோலி மற்றும் இந்தாண்டு முதல் போட்டியில் களமிறங்கியுள்ள ரஜத் படிதார் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
இதில் சிறப்பாக விளையாடிய கோலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்து, 53 பந்துகளில் 54 ரன்கள் அடித்த நிலையில், விக்கெட்டை இழந்தார். இவரை தொடர்ந்து படிதார் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த கிளென் மேக்ஸ்வெல் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களம்கண்ட பெங்களூரு அணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை குஜராத் பந்துவீச்சாளர்களிடம் பறிகொடுத்தனர்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 170 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 54, ரஜத் படிதார் 52 ரன்களை எடுத்தனர். குஜராத் அணி பந்துவீச்சை பொறுத்தளவில் பிரதீப் சங்வான் 2, மற்ற பந்துவீச்சாளர்கள் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த நிலையில், 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…