#GTvRCB: டாஸ் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங் தேர்வு!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐபிஎல் தொடரின் இன்றைய பிற்பகல் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை, புனே, மகாராஷ்டிரா உள்ளிட்ட 3 நகரங்களில் லீக் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினத்தில் இரண்டாய் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி, முதல் போட்டியான இன்று பிற்பகல் நடக்கும் 43-வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன.

இதுவரை குஜராத் டைட்டன்ஸ் 8 போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் உள்ள முதலிடத்தில் உள்ளது. மறுபக்கம் 9 போட்டிகளில் 5ல் மட்டும் வெற்றி பெற்று, பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்தில உள்ளது. குஜராத் அணி தொடர் வெற்றியை பதிவு செய்து வரும் நிலையில், பெங்களூரு 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் குஜராத் அணி வெற்றி தொடருமா அல்லது பெங்களூரு தோல்வியில் இருந்து மீளுமா என ரசிர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இருப்பினும் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது.

அந்தவகையில், மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த மைதானத்தை பொறுத்தளவில், பேட்டிங் முதலில் செய்யும் அணி 10 முறையும், பேட்டிங் இரண்டாவதாக செய்யும் அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதுவும், LBS மற்றும் MEDIUM போடும் பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பு இருப்பதாகவும் பிட்ச் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (பிளேயிங் லெவன்): ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, மஹிபால் லோம்ரோர், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்): ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், பிரதீப் சங்வான், அல்சாரி ஜோசப், லாக்கி பெர்குசன், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“தம்பி விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை.!” பாசமழை பொழியும் சீமான்!

“தம்பி விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை.!” பாசமழை பொழியும் சீமான்!

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…

29 minutes ago

“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…

2 hours ago

திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் வெளியிட்ட டாப் 5 அறிவிப்புகள் இதோ…

திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…

2 hours ago

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…

3 hours ago

நடிகர் ஸ்ரீ உடல்நிலை எப்படி இருக்கு? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை!

சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…

4 hours ago

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

6 hours ago