#IPL2022: வெற்றிபெறுமா மும்பை? டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த குஜராத்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 51-வது போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 51-வது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
விளையாடும் வீரர்கள்:
மும்பை இந்தியன்ஸ்:
ரோகித் சர்மா (கேன்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கைரன் பொல்லார்டு, டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், குமார் கார்த்திகேயா, ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித்
குஜராத் டைட்டன்ஸ்:
விருத்திமன் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தேவாதியா, ரஷித் கான், பிரதீப் சங்வான், லாக்கி பெர்குசன், அல்சாரி ஜோசப், முகமது ஷமி.