#IPL2022: போராடிய ரசல்.. 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இதில் 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 33-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 156 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 67 ரன்கள் அடித்து அசத்தினார்.
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியன் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் பில்லிங்க்ஸ் – சுனில் நரேன் களமிறங்கினார்கள். 4 ரன்கள் அடித்து சாம் பில்லிங்க்ஸ் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து 5 ரன்கள் எடுத்து சுனில் நரேன் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் 2 ரன்கள் எடுத்து நிதிஷ் ராணா தனது விக்கெட்டை இழக்க, 12 ரன்கள் மட்டுமே அடித்து ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறினார்.
அவரையடுத்து சிறப்பாக ஆடிவந்த ரிங்கு சிங் 35 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, அவரையடுத்து அதிரடியாக ஆடிவந்த ரசல், அணியை வெற்றிபெற வைக்க போராடினார். அதிரடியாக ஆடிவந்த ரசல் 48 ரன்கள் அடித்து தனது விக்கெட்டையும் இழந்தார். இறுதியாக கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.