#IPL2022: கையை விட்டு போன போட்டி.. தெவாத்தியாவின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி வெற்றி!
இன்றைய ஐபிஎல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மத்தியூ வேடு – ஸுப்மன் கில் களமிறங்கினார்கள்.
போட்டி தொடக்கத்திலே மத்தியூ வேடு 6 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, சாய் சுதர்சன் களமிறங்கினார். கில்லுடன் இணைந்து சுதர்சன் அதிரடியாக ஆடினார். 30 ரன்களை அடித்து சுதர்சன் தனது விக்கெட்டை இழக்க, அவரையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி 27 ரன்கள் குவித்து வெளியேறினார். ஒரு கட்டத்தில் 2 பந்துகளுக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் இருந்த ராகுல் தேவாதியா, அதிரடியாக 2 சிக்ஸர் அடித்தார். இதன்மூலம் குஜராத் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.