ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடந்து முடிந்த 4-ம் போட்டியில் குஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதினார்கள். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சப்மன் கில் – மத்தியு வேடு களமிறங்கினார்கள். இதில் சப்மன் கில் டக் அவுட் ஆக, அவரைதொடர்ந்து களமிறங்கிய விஜய்சங்கர், 4 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா மத்தியு வேடுடன் இணைந்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கொர் உயர தூணாக அமைந்தார்.
சிறப்பாக ஆடிவந்த ஹர்திக் பாண்டியா 33 ரன்களில் வெளியேற, மறுமுனையில் இருந்த மத்தியு 30 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடந்து களமிறங்கிய ராகுல் தேவாதியா, அதிரடியாக ஆடி அணியை வெற்றிபெற வைத்துள்ளார். இறுதியாக குஜராத் அணி, 19.4 ஓவர்களில் 161 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…