GT vs MI Qualifier 2: டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு..!

GT vs MI Qualifier 2

ஐபிஎல் தொடரின் 2-வது தகுதிச்சுற்று GT vs MI போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டியானது  இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

நடப்பு ஐபிஎல்லில் மும்பையுடன் மோதிய இரண்டு போட்டிகளில் குஜராத் அணி ஓரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி இறுதி போட்டிக்கு செல்வதற்கான முக்கியப்போட்டி என்பதால், இரு அணி வீரர்களும் முழு உத்வேகத்துடன் களமிறங்குகின்றனர்.

இதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோதவுள்ளது. குஜராத் அணி கடைசியாக சென்னை அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. மும்பை அணி கடைசியாக லக்னோ அணியுடன் மோதிய போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

தற்பொழுது, அகமதாபாத்தில் பெய்த மழையின் காரணமாக போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்):

விருத்திமான் சாஹா (W), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (C), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி

மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்):

இஷான் கிஷன்(W), ரோஹித் சர்மா(C), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்