GT vs MI : இறுதி வரை போராட்டம்… திணறிய மும்பை.! குஜராத் அணி அபார வெற்றி.!
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசனின் ஒன்பதாவது போட்டி இந்ரயு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்தகுஜராத் அணிஅணி வீரர்கள் பவுண்டரிகளை பறக்கவிட்டனர்.
குஜராத் அணி சார்பாக, சாய் சுதர்ஷன் 41 பந்துகளில் 63 ரன்களும், ஷுப்மான் கில் 27 பந்துகளில் 38 ரன்களும், ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர். இதன் பிறகு, ஷாருக் கான் 9 ரன்கள் எடுத்தும், ஷர்பான் ரூதர்ஃபோர்டு 18 ரன்கள் 6 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம், மும்பை அணிக்கு 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி.
இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி சார்பாக, ரோஹித் 4 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராபினால் மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. திலக் வர்மா 36 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மின்ஜை சாய் கிஷோர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், அவர் ஆறு பந்துகளில் மூன்று ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார். சூர்யகுமார் சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடிக்கும் தருவாயில் இருந்தார், ஆனால் 28 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 48 ரன்கள் எடுத்த பிறகு ஆட்டமிழந்தார். 16 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர், ஹார்டிக் 17 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார். மும்பை வீரர்கள் ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன் ஸ்டம்புகளை தகர்த்து கலக்கினார் குஜராத் பவுலர் முகமது சிராஜ். மேலும், வெறும் 18 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வீரர் பிரசித் கிருஷ்ணா மாஸ் காட்டினார்.
குஜராத்தின் பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால், மும்பை அணியால் 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. ஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.