GT vs MI : மாஸ் காட்டுவாரா ரோஹித்? டாஸ் வென்ற பாண்டியா பந்துவீச முடிவு.!
குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் – மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த 9-வது போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இப்பொது (7 மணி அளவில்) டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், முதலில் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி பேட்டிங் செய்ய போகிறது.
இந்த மைதனாம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், ரன்மழையை எதிர்பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியதில், 3-ல் குஜராத்தும், 2-ல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய தினம் எந்த அணி வெல்லும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
முதல் போட்டியில் தடை காரணமாக கடந்த போட்டியில் விளையாட முடியாத ஹார்திக் பாண்ட்யா இந்த போட்டியில் இருந்து மீண்டும் களமிறங்குவார். கடந்த சீசனில் ஏற்பட்ட கசப்பான விமர்சனங்களை எதிர்கொண்டு தலைமையேற்று வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வீரர்கள்
குஜராத் அணி
கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான அணியில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவதியா, ரஷீத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், காகிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை அணி
கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியில், ரியான் ரிக்கல்டன், சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, திலக் வர்மா, நமன் திர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், முஜீப் உர் ரஹ்மான், சத்யநாராயண ராஜு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.