KKR vs GT : கொல்கத்தாவை அலறவிட்ட குஜராத் கேப்டன் கில்! ஜஸ்ட் மிஸ்-ஆன செஞ்சுரி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இடத்திலும், ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளும் பிளே ஆப் தகுதி சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் விளையாடி வருவதால் பரபரப்புக்கு பஞ்சமின்றி விளையாட்டு அமைந்துள்ளது.
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை அடுத்து சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ அணி பேட்டிங் செய்த்தது.
குஜராத் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். சாய் சுதர்சன் 36 பந்துகளில் 6 பவுண்டரி , 1 சிக்ஸர் உட்பட 56 ரன்கள் எடுத்தனர். கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 55பந்தில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என விளாசி 90 ரன்கள் அடித்தார். சதம் அடிக்க 10 ரன்கள் மட்டுமே இருந்த நிலையில் ஜஸ்ட் மிஸ் செய்தார்.
ராகுல் திவாட்டியா வந்த வேகத்தில் ரன் எடுக்காமல் வெளியேறினார். ஜோஸ் பட்லர் 23 பந்தில் 41 ரன்கள் அடித்துள்ளார். இறுதியில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் அடித்துள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கொல்கத்தா அணி வெற்றி பெற 20 ஓவரில் 199 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் அடுத்து களமிறங்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!
April 21, 2025