ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா – கேன் வில்லியம்சன் களமிறங்கினார்கள்.
தொடக்கத்திலே 5 ரன்கள் அடித்து கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 16 ரன்கள் அடித்து வெளியேறினார். அவரைதொடர்ந்து ஐடென் மார்கம் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த அபிஷேக் ஷர்மா 42 பந்துகளுக்கு 65 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த ஐடென் மார்க்கம் 40 பந்துகளுக்கு 56 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைதொடர்ந்து களமிறங்கிய ஷஷாங்க் 6 பந்துகளுக்கு 25 ரன்கள் அடித்து அசத்தினார். இறுதியாக ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கியது.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…