#IPL2022: லிவிங்ஸ்டன் அதிரடி அரைசதம்.. குஜராத் அணிக்கு 190 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், 190 ரன்கள் அடித்தால் குஜராத் அணி வெற்றிபெறும்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே நிதானமாக ஆடிவந்த மயங்க் அகர்வால், 5 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைதொடர்ந்து களமிறங்கிய ஜானி பைர்ஸ்டோ, தவானுடன் இணைந்து அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 8 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து ஷிகர் தவான் 35 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ஜிதேஷ், சிறப்பாக ஆடி 23 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை இழக்க, அவரையடுத்து களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆட தொடங்கினார்.
மறுமுனையில் ஓடியன் ஸ்மித் டக்-அவுட் ஆக, சிக்ஸர், பவுண்டரி என பந்துகளை பறக்கவிட்ட லிவிங்ஸ்டன், 21 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். 7 பவுண்டரி, 4 சிக்ஸர் என மொத்தம் 64 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக ராகுல் சஹர் அதிரடியாக ஆடி 14 பந்துகளில் 22 ரன்கள் அடித்து அசத்தினார். பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் அடித்தது.
தற்பொழுது 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் ரஷீத் கான் தலா 3 விக்கெட்களும், தர்ஷன் நல்கண்டே தலா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள்.