மேற்கிந்திய தீவுகள் அணி அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவுடனான முதல் டெஸ்டின் 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 94 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 555 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 649 ரன்கள் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பிஷூ அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திணறிய அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதன்மூலம், 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்று 3 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா அணியின் பந்துவீச்சில் அஷ்வின் 4, முகமது ஷமி 2 விக்கெட் எடுத்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 468 ரன்கள் பின் தங்கியதால் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. இந்தியா ‘பாலோ ஆன்’ கொடுத்தது.இதன் பின் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 5 விக்கெட் வீழ்த்தினார்.இதனால் இந்திய அணி 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் சதம் அடித்த அறிமுக பிரித்திவி ஷா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.இந்த போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு மிகப்பெரிய தோல்வி ஆகும்.
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…