ரோஹித் ரெக்கார்ட் காலி.. அடுத்து கோலி தான் ..! பாபர் அசாம் செய்த மாபெரும் சாதனை !!
பாபர் அசாம் : சர்வேதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பாபர் அசாம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூன் 29ம் தேதி நடைபெறுகிறது. மேலும், இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இருக்கிறார்கள் இரு அணிகளும் மே-9ம் தேதி போட்டி நடைபெற உள்ளது.
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவின் சாதனையை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான பாபர் அசாம் தற்போது முறியடித்துள்ளார். அது என்ன சாதனை என்றால் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 3974 ரன்கள் எடுத்து 2-ம் இடத்தில் இருந்து வந்தார்.
தற்போது 3987 ரன்களை எடுத்து ரோஹித்தின் சாதனையை முறியடித்து, அவரை பின்னுக்கு தள்ளி 2-ம் இடத்திற்கு முன்னேறி உள்ளார் பாபர் அசாம். இதற்கு காரணம் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில் 4டி20 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
இதில் முதல் டி20 போட்டியானது மழையின் காரணமாக நடைபெறாமல் இருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் 26 பந்துகளில் 32 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
இதனால் வழக்கம் போல அவர் ரன்கள் எடுத்தாலும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டின் மூலம் பல விமர்சனங்களை கண்டாலும் இந்த 26 ரன்கள் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், இந்த பட்டியலில் விராட் கோலி 4037 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். தற்போது, பாபர் அசாமுக்கு விராட் கோலியின் ரெக்கார்டை முறியடிக்க இன்னும் 51 ரன்கள் தேவை.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ரசிகர்கள் டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னே நடைபெற்று வரும் இந்த இங்கிலாந்து தொடரில் பாபர் அசாம் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் முதலிடம் வந்து விடுவார் என எதிர்ப்பார்க்கின்றனர். மேலும், 13 ரன்கள் எடுத்தால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை எட்டிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.