கடலூரை சேர்ந்த ரசிகர் ஒருவர் தோனி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரூ1.50 லட்சம் செலவில் வீட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றியுள்ளார்.
கிரிக்கெட்டை பொருத்தவரை அதிக அளவிலான ரசிகர் பட்டாளங்களை வைத்துள்ளவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி.இவர் கேப்டனாக பல சாதனைகளை படைத்துள்ளார்.உலக அளவில் மூன்று விதமான கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி தான்.ஐபிஎல்லில் சென்னை அணி இவரது தலைமையில் 3 முறை கோப்பைகளை கைப்பற்றியுள்ளது.
இவரது ஹெலிகாப்டர் ஷாட் அனைவரையும் கவர்ந்தது.கூல் கேப்டன் என்றும் அனைவராலும் அழைக்கப்படுபவர்.நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை அணி 5 போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் , ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர்.ஆனால் ஒரு சில ரசிகர்கள் தோனியின் தலைமையிலான சென்னை அணி தோற்றாலும்,ஜெயித்தாலும் என்றும் ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்து வருகின்றனர்.மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தோனிக்கு வெறித்தனமான ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.
அந்தவகையில் தான் கடலூரை சேர்ந்த வெறித்தனமான ரசிகர் ஒருவர் தோனி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரூ1.50 லட்சம் செலவில் வீட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றியுள்ளார். கோபிகிருஷ்ணன் என்பவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.இவர் தோனியின் தீவிர ரசிகர் ஆவார்.துபாயில் வேலைபார்த்து வருகிறார்.அரங்கூரில் உள்ள தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி நிறமான மஞ்சள் நிறத்தில் மாற்றியுள்ளார். அவரது இல்லத்திற்கு Home Of Dhoni Fan என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தோனியின் புகைப்படம் மற்றும் WhistlePodu என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…