இந்தா வந்துட்டேன் ராசா! மும்பை ரசிகர்களுக்கு குட் நியூஸ்..பும்ரா குறித்த புது அப்டேட்!

காயத்தில் இருந்து மீண்டு வரும் பும்ரா வரும் ஏப்ரல் 17 -ஆம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

bumrah MI

பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. அணியில் வீரர்கள் பார்ம் மோசமானது தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தாலும் பந்துவீச்சில் தூணாக இருந்த பும்ரா இல்லாதது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர் எப்போது அணிக்கு மீண்டும் திரும்புவார் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம்  இந்திய கிரிக்கெட் அணி பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடிக்கொண்டிருந்தபோது போட்டியில் இருந்து  காயம் காரணமாக பாதியிலேயே ஜனவரி 4-ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்றார். அதில் இருந்து மருத்துவர்கள் அவரை பந்துவீச வேண்டாம் இப்போது நீங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என்பது கட்டாயம் எனவே ஓய்வு எடுங்கள் என்று அறிவுரை வழங்கினார்கள். எனவே, மருத்துவர்களின் அறிவுரையின் படி அவரும் ஓய்வு எடுத்தார்.

காயம் காரணமாக அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் வாய்ப்பையும் இழந்தார். அதனைத்தொடர்ந்து நடப்பாண்டு ஐபிஎல் தொடரையும் தவறவிட்டுவிடுவாரோ என ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு குட் நியூஸ் கொடுக்கும் வகையில், NCA-வில் ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதியுடன் பந்து வீசும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய அணியில் உள்ள எந்த வீரருக்கும் காயம் ஏற்பட்டால், அவர்கள் நிச்சயமாக பெங்களூருவில் உள்ள NCA-வுக்குச் செல்ல வேண்டும். எனவே, இப்போது பும்ரா அங்கு தான் இருக்கிறார். அங்கு முழு உடற்தகுதி ஆன பிறகு தான் அடுத்ததாக போட்டியில் விளையாடுவதற்கே அனுமதி வழங்கப்படும்.  இப்போது பும்ராவும் சிறப்பாக முழு உடற்தகுதியுடன் பந்துவீசியுள்ள காரணத்தால் விரைவில் அவருக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது அணிக்கு திரும்ப வாய்ப்பு 

அணியின் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே, பிசிசிஐ மருத்துவக் குழுவின் கருத்தைப் பொறுத்து நாங்கள் காத்திருக்க வேண்டும். தற்போது எல்லாம் நன்றாக உள்ளது, அனுமதி வழங்கிய பிறகு அணிக்கு திரும்புவார் ” என்று கூறியுள்ளார். எனவே, துல்லியமான தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் ஏப்ரல் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் அவர் மும்பை அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

மும்பை இன்று கொல்கத்தா அணியை எதிர்கொள்ளவுள்ளது அடுத்ததாக ஏப்ரல் 4 லக்னோ அணியையும், ஏப்ரல் 7 பெங்களூர் அணியையும் எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த போட்டிகள் முடிந்த பிறகு அவர் ஏப்ரல் 17 ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமான போட்டி ஏனென்றால், ஹைதராபாத் அணியில் அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய விக்கெட்களை வீழ்த்தவேண்டும் என்றால் பும்ரா போன்று ஒரு முக்கியமான பந்துவீச்சாளர் இருந்தால் நன்றாக இருக்கும். அந்த போட்டியில் அவர் அணிக்கு திரும்ப அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்