இந்திய கிரிக்கெட்டின் அடையாளம் சச்சின் டெண்டுல்கர்,இவர் ஆறு மாநிலங்களில் உள்ள மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 100 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி செய்துள்ளார்.
சச்சின் கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல் தனது பொதுவாழ்க்கையிலும் பல குறிப்பிடக்கூடிய சிறப்பான செயல்களை செய்து வருகிறார்.சச்சின் ஏகம் என்ற அறக்கட்டளையில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.இதன் மூலம் அரசு மற்றும் அறக்கட்டளை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குறிப்பிட்ட மருத்துவ செலவுகளை செய்ய முடியாதவர்களுக்கு ,டெண்டுல்கரின் அறக்கட்டளை உதவி வருகிறது.இதன் மூலம் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், அசாம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள 100 குழந்தைகளுக்கு உதவி கிடைத்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், சச்சின் அசாமின் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மகுண்டா மருத்துவமனைக்கு குழந்தைகளுக்கான சிகிச்சைக்கு தேவைப்படக்கூடிய உபகரணங்களை கொடுத்து உதவியுள்ளார். இது ஒவ்வொரு ஆண்டும் 2000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக குழந்தைகள் தினத்தன்று யுனிசெஃப் உடனான இணைய கருத்தரங்கில் சச்சின் பங்கேற்றார், வருங்கால உலகின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் குழந்தைகளை முக்கிய பங்கு இருக்கும் என ஊக்குவித்தார்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…