“ரோகித் சர்மாவிடம் போய் சொல்லு” – ஜெய்ஸ்வாலுக்கு அனில் கும்ப்ளே அறிவுரை.
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நிறைவடைந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்று டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்த வெற்றிக்கு இந்தியாவின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் பெரும் பங்கு ஆற்றினார். இந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் சரியாக விளையாடாத ஜெய்ஸ்வால், இரண்டாவது இன்னிங்சில் இரட்டை சதம் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார். இந்த டெஸ்ட் தொடரில் 545 ரன்கள் எடுத்து 109 சராசரிகளுடன் முன்னணி பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் உள்ளார்.
#INDvsENG : 4வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு ..?
இவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே ஜெய்ஸ்வாலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும், ” உங்களது பேட்டிங் சிறப்பாக உள்ளது, பறிச்சியின் போது உங்களது லெக் ஸ்பின் திறனை பார்த்தேன். உங்களுக்கு லெக் ஸ்பின் பந்து வீச்சில் நல்ல ஆக்ஷனும் உள்ளது.
நீங்கள் பந்து வீச்சிலும் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். அது அணியின் மிக சிக்கலான தருணத்தில் கைகொடுக்க நேரிடலாம். போட்டியின் போது பந்து வீச கேப்டனிடம் அனுமதி கேட்டு சில ஓவர்கள் பந்து வீசுங்கள் . இதை ரோஹித் ஷர்மாவிடம் போய் கூறுங்கள் “, என்று ஜெய்ஸ்வாலுக்கு அனில் கும்ப்ளே அறிவுரையும் கூறி உள்ளார்.
இதற்கு, ” ரோஹித் என்னிடம் பந்து வீச தயாராக இரு என்று கூறினார், அவரிடம் நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினேன் அதனால் நான் எப்போது வேண்டுமானாலும் களத்தில் பந்து வீசலாம்”, என்று அவரது அறிவுரைக்கு ஜெய்ஸ்வால் பதிலளித்துள்ளார்.