என்னால முடியாது வேறு வீரரை வச்சு விளையாடுங்க! கிளென் மேக்ஸ்வெல் அதிர்ச்சி முடிவு!

glenn maxwell

ஐபிஎல் 2024 : தன்னுடைய இடத்தில் வேறொரு வீரரை வைத்து விளையாடி கொள்ளுங்கள் என பெங்களூர் வீரர் கிளென் மேக்ஸ்வெல்  கூறியுள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் மோசமான பார்மில் இருப்பதால் அவர் மீது எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் அவர் 6 போட்டிகள் விளையாடி 32 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். கடைசியாக நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை.

இதற்கிடையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த கிளென் மேக்ஸ்வெல் ” தனக்கு பதிலாக தான் விளையாடும் அந்த இடத்திற்கு வேறு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என பெருந்தன்மை உடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கடைசியாக நான் விளையாடிய போட்டிக்கு பிறகு கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் பயிற்சியாளர்களிடம்  சென்று பேசினேன்.

என்னுடைய அந்த இடத்தில் வேறு யாரையாவது களமிறக்கி முயற்சி செய்து பாருங்கள். அப்படி அந்த இடத்திற்கு சரியான வீரர் கிடைக்கும்போது அந்த இடத்திற்கு அவரையே தக்க வைத்து கொள்ளுங்கள் என்று கூறினேன். போட்டிகளின போது நான் மனதளவில் மற்றும் உடல் ரீதியாக சிறிது ஓய்வு பெறுவதற்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும் என்று உணர்கிறேன். இப்போது எனக்கு கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் தான் நான் திரும்ப பலமான சக்தியுடன் திரும்பி வருவேன்.

எனவே என்னை பொறுத்தவரை எனக்கு இப்போது ஓய்வு வேண்டும் நான் திரும்பி வரும் வரை என்னுடைய இடத்தில் வேறு யாரவைத்து விளையாட வைத்து கொள்ளுங்கள். தனிப்பட்ட முறையில், இது மிகவும் எளிதான முடிவு” எனவும்  கிளென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.  கிளென் மேக்ஸ்வெல் இந்த முடிவு அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested