15-வது ஐபிஎல் தொடரின் நான்காம் போட்டியில் குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், அணியில் இடம்பெறவுள்ள வீரர்களின் பட்டியல் இதோ.
ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று நடைபெறும் நான்காம் போட்டியில் குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கவுள்ளது. மேலும், ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் புதிய அணிகள் என்பதால், வெற்றிக்கான முனைப்புடன் தீவிரமாக விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு குஜராத் அணி நிர்வாகம் கேப்டன் பதவியை வழங்கியுள்ளது. இதனால் தனது பார்மை மீண்டும் நிரூபிப்பதற்கு பாண்டியாவிற்கு இது பெரிய வாய்ப்பாகும். மேலும், இன்றைய போட்டியில் 24 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 1,500 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இவர் இணைவார்.
அதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல், கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங்கில் சிறந்த வீரராக விளங்கினார். அதேபோல நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், தொடக்க வீரராக களமிறங்கவுள்ளார். இன்றைய போட்டியில் அவர் ஒரு அரைசதம் அடித்தால், டி-20 கிரிக்கெட் தொடரில் 50 அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டுவார்.
எதிர்பார்க்கப்படும் XI:
குஜராத் டைடன்ஸ்:
ஷுப்மன் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அபினவ் மனோகர், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராகுல் தெவாட்டியா, விஜய் சங்கர், டொமினிக் டிரேக்ஸ், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி.
லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ்:
கே.எல்.ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், மனிஷ் பாண்டே, மனன் வோஹ்ரா, க்ருனால் பாண்டியா, தீபக் ஹூடா, கிருஷ்ணப்ப கவுதம், ரவி பிஷ்னாய், அவேஷ் கான், அங்கித் ராஜ்பூத், துஷ்மந்த சமீரா.
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…