“கம்பீருக்கு நேரம் கொடுங்க”..வேண்டுகோள் வைத்த சவுரவ் கங்குலி!
சூழ்நிலைகளை மாற்றியமைக்கும் கம்பீருடைய அசத்தலான திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸுக்கு வருகை தந்துள்ளார்.
கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு அவருடைய தலைமையில் பயிற்சி கீழ் இந்திய அணி விளையாடும் முதல் டி20 தொடர் இது தான். இதற்கு முன்பு கடைசியாக டெஸ்ட் தொடரான பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரில் இந்தியா விளையாடி இருந்தது. அந்த தொடரில் தோல்வி அடைந்த காரணத்தால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.
அத்துடன் கம்பீர் தலைமை பயிற்சி சரியில்லை என்கிற வகையிலெல்லாம் விமர்சனங்கள் எழுந்தது. எனவே, இந்த தொடரில் இந்திய அணி வெற்றிபெறும் விமர்சனங்கள் அனைத்திற்கும் அந்த வெற்றி பதிலடி கொடுக்கும் என்ற நினைப்போடு இந்திய ரசிகர்கள் காத்துள்ளனர். இந்த சுழலில், இந்திய கிரிகெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு இன்னும் அவகாசம் கொடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் பேசும்போது “அவர் இந்திய அணியை அணுகும் முறையை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு பயிற்சியாளராக கொல்கத்தா அணிக்கு 12 வருடங்களுக்குப் பிறகு வெற்றியைத் தேடித்தந்த அவருக்கு அவகாசம் கொடுக்க வேண்டியது கட்டாயம்.
அவருக்கான அவகாசத்தை நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் நிச்சயமாக அவர் இந்திய அணியின் சிறந்த தலைமை ஆசிரியராக மாறுவார். ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் இந்த செயல்முறையை நம்பி, இந்திய அணியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விமர்சனங்களை முன் வைக்காமல் கம்பீருக்கு அதிக நேரம் கொடுக்க வேண்டும். கடினமான சூழ்நிலைகளை மாற்றியமைக்கும் அவருடைய அசத்தலான திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது ” எனவும் சவுரவ் கங்குலி கேட்டுக்கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025