கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சனுக்கு பெண் குழந்தை ..!
கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நியூஸ்லாந்து அணியின் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த அதிரடி ஆட்டக்காரரான கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக பல சாதனைகளைப் படைத்துள்ளார் . அவருடை சாதனைகளை பற்றி சொல்லி தெரியவேண்டியவை ஒன்றுமில்லை, எந்த ஒரு கடினமான சூழ்நிலைகளிலும் அணியை பொறுப்புடன் விளையாடி மீட்டெடுப்பார்.
இந்த நிலையில் வில்லியம்சனிற்கும் அவரது மனைவியான சாரா ரஹீமிற்கும் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை கேன் வில்லியம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தனது மனைவியின் பிரசவத்திற்காக மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாடவில்லை. அதைபோல் வருகின்ற 18ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வில்லியம்சன் விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram