கில்லுக்கு ராசி இருக்கு …. ஆனால் ருதுராஜுக்கு அது இல்லை – க்ரிஷ் ஸ்ரீகாந்த்
க்ரிஷ் ஸ்ரீகாந்த் : இலங்கை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்த நிலையில் பல கருத்துக்கள் எழுந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட்டரான க்ரிஷ் ஸ்ரீகாந்த் விமர்சித்து பேசி இருக்கிறார்.
வரும் ஜூலை-27ம் தேதி அன்று இலங்கை உடனான சுற்று பயண தொடருக்கான அதிகாரப்பூர்வ இந்திய அணியை பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் பல தரப்பினர்களிடையே பல கருத்துக்கள் எழுந்தது. அதிலும் முக்கியகமாக அனைவரும் முன்வைப்பது ருதுராஜ் கெய்க்வாட்டின் பெயர் தான். பிசிசிஐ அறிவித்த இந்திய அணியில் துணை கேப்டனாக கில்லை அறிவித்தது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிசிசிஐ அறிவித்த இந்த இந்திய அணியை ஆகாஷ் சோப்ரா, ரிக்கி பாண்டிங் போன்ற பலரும் விமர்சித்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான க்ரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தற்போது விமர்சித்து பேசி இருக்கிறார். அவர் அவரது யூடுயூப் சேனலில் அவரது மகன் அனிருதா ஸ்ரீகாந்த்துடன் உரையாடிய போது இந்திய அணியை குறித்தும், கில் குறித்தும் பல கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், “சுப்மன் கில் டி20 அணியில் இடம்பெற கூடாது, அவருக்கு பதிலாக எந்த கேள்வியும் இல்லாமல் ருதுராஜ் தான் இடம்பெற்றிருக்க வேண்டும். அல்லது கே.எல்.ராகுல் கூட இடம்பெற்றிருக்கலாம். சுப்மன் கில்லுக்கு நல்ல ராசி இருக்கிறது, ஆனால் ருதுராஜுக்கு அது இல்லை அதனால் தான் அணியில் தேர்வாக இல்லை போல, ருதுராஜ் போன்ற வேராக கடுமையாக உழைத்து தான் மேலே வரவேண்டி இருக்கிறது.
அதை போல துணை கேப்டனாகவும் கில்லை நான் தேர்வு செய்யமாட்டேன். ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக டி20 உலகக்கோப்பையில் நன்றாக விளையாடி வாணியை வெற்றி பெற வைத்தவர் தான், அதனால் அவரை மாற்றுவதற்கான காரணம் என்ன என்றும் தெரியவில்லை”, என அந்த உரையாடலில் க்ரிஷ் ஸ்ரீகாந்த் கூறி இருந்தார்.