GGvsMIW : முதல் இன்னிங்ஸ் முடிவில் 207 ரன்கள் குவித்தது மும்பை அணி..!
முதல் இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட்டு இழப்பில் 207 ரன்கள் குவித்தது மும்பை அணி.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டம் இன்று மும்பையிலுள்ள டி.ஒய் பட்டில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெத் மூனி கேப்டனாகவும் செயல்படுகின்றனர். இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யாஸ்திகா பாட்டியா மற்றும் ஹேலி மேத்யூஸ் களமிறங்கினர். களமிறங்கிய சில நிமிடங்களிலேயே குஜராத் அணியின் தனுஜா கன்வர் வீசிய பந்தில் யாஸ்திகா பாட்டியா, வேர்ஹாம்-இன் கேட்ச் ஆட்டமிழந்தார். ஹேலி மேத்யூஸ் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தார். பின்னர் கார்ட்னர் வீசிய பந்தில் 47 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டமிழந்தார்.
இவரையடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அமெலியா கெர் அணியை முன்னோக்கி நகர்த்தினர். இந்த போட்டியில் அதிகபட்சமாக ஹெய்லி மேத்யூஸ் 47 ரன்களும், ஹர்மன்ப்ரீத் கவுர் 65 ரன்களும், அமெலியா கெர் 45* ரன்களும் எடுத்துள்ளனர். அமெலியா கெர் இறுதி ஓவர் முடியும்வரை களத்தில் இருந்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.