GGvsDC : பந்து வீச்சில் மிரட்டிய குஜராத் ஜெயன்ட்ஸ்.. திணறிய டெல்லி..! 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்றது.
மகளிர் ஐபிஎல் தொடரின் 14-வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் பெண்கள் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது.
148 ரன்கள் என்ற இலக்கில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மெக் லானிங் மற்றும் ஷஃபாலி வர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் ஆட்டமிழந்த நிலையில் மரிசான் கேப், ஆலிஸ் கேப்ஸி மற்றும் அருந்ததி ரெட்டி அணிக்கு ரன்களை குவித்தனர். ஷிகா பாண்டே மற்றும் பூனம் யாதவ் இறுதிவரை களத்தில் நின்றனர். இருப்பினும், குஜராத்தின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
18.4 ஓவர்கள் முடிந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களை அடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியை, 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வென்றது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக மரிசான் கேப் 36 ரன்களும், அருந்ததி ரெட்டி 25 ரன்களும், ஆலிஸ் கேப்ஸி 22 ரன்களும் குவித்துள்ளனர். குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் கிம் கார்த், தனுஜா கன்வர் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஆஷ்லே கார்ட்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.