Gg Vs Rcb : மகளிர் பிரீமியர் லீக்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச்சு.!
இன்று நடக்கும் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

குஜராத் : 2025-க்கான மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் இன்று தொடங்கியது. 5 அணிகள் பங்கேற்கும் இந்த T20 மகளிர் பிரீமியர் லீக் கடந்த 2023-ல் தொடங்கியது. முதல் சீசனில் மும்பை மகளிர் கிரிக்கெட் அணி அணியும், இரண்டாவது சீசனில் RCB மகளிர் கிரிக்கெட் அணியும் வெற்றி பெற்றன.
இந்தத் தொடரில் (3-வது சீசன்) நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, 2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், டில்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. இன்று நடக்கும் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இன்று முதல் மார்ச் 15ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறவுள்ளது.
முதல் போட்டியானது குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோதம்பி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி அளவில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, குஜராத் ஜெயன்ட்ஸ் மகளிர் அணி சார்பாக பெத் மூனி மற்றும் லாரா வால்வார்ட் களமிறங்கி விளையாடி 4.4 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்தனர்.
ஆனால், RCB மகளிர் அணியின் ரேணுகா தாக்கூர் சிங்கின் 3வது பந்தில் லாரா வால்வார்ட் அவுட்டாகி வெளியேறினார். இதை தொடர்ந்து, இப்பொழுது டிலான் ஹேமலதா களமிறங்கி விளையாடி வருகிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி
கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான அணியில், டேனியல் வயட்-ஹாட்ஜ், எல்லிஸ் பெர்ரி, ரக்வி பிஸ்ட், ரிச்சா கோஷ், கனிகா அஹுஜா, ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், பிரேமா ராவத், ஜோஷிதா வி ஜே, ரேணுகா தாக்கூர் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணி
கேப்டன் தலைமையிலான அணியில், ஆஷ்லீ கார்ட்னர் லாரா வோல்வார்ட், பெத் மூனி, தயாளன் ஹேமலதா, டியாண்ட்ரா டாட்டின், ஹர்லீன் தியோல், சிம்ரன் ஷேக், தனுஜா கன்வர், சாயாலி சத்காரே, பிரியா மிஸ்ரா, காஷ்வீ கௌதம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.