ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

ஏப்ரல் 11ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள CSK vs KKR போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை, இன்று (ஏப்.7) காலை 10:15 மணிக்குத் தொடங்குகிறது.

csk vs kkr tickets

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் ஏப்ரல் 11, 2025 அன்று சென்னையில் உள்ள பிரபலமான எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் (சேப்பாக்கம்) நடைபெற உள்ளது.

இதற்கான டிக்கெட் புக்கிங், இன்று (07.04.2025) காலை 10.15 மணிக்கு ஆன்லைன் மூலம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.chennaisuperkings.com மூலம் பெறலாம்.

டிக்கெட் விலை குறித்த விவரங்கள் 

  • அடிப்படை ஸ்டாண்டுகள் (General Stands): ரூ.1,500 – ரூ.3,000
  • நடுத்தர அளவிலான இருக்கைகள் (Mid-Tier Stands): ரூ.3,000 – ரூ.5,000
  • பிரீமியம் இருக்கைகள் (Premium Stands): ரூ.5,000 – ரூ.10,000
  • விஐபி/கார்ப்பரேட் பாக்ஸ்கள் (VIP/Corporate Boxes): ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அல்லது அதற்கு மேல்

குறிப்பு : – ஒரு நபருக்கு அதிகபட்சம் 2 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்