அவர் ஒரு ஜீனியஸ் என்று ஏபி டிவில்லியர்ஸை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்து கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 22 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது, இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். அதன் படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தனர். இதில் ஏபி டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 75* ரன்கள் எடுத்தார். அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்து, இதனால் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஏபி டிவில்லியர்ஸை பலர் பாராட்டி வருகின்றார்கள், அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியது ” ஏபி டிவில்லியர்ஸ் இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினர். அவர் ஒரு ஜீனியஸ். ஏபி டிவில்லியர்ஸ் இப்படி அதிரடியாக விளையாடுவது தான் அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். 20 ஓவர்கள் போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் ஆட்டத்தை பார்க்க எங்கு வேணாலும் செல்லலாம். ஏபி டிவில்லியர்ஸ் அடிக்கும் சிக்ஸர்களை பார்த்தால் மகிழ்ச்சி கிடைக்கும். 20 ஓவர்கள் போட்டியில் ” என்றும் கூறிஉள்ளார்.
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…