பொறுத்தது எல்லாம் போதும்..!இனி பேச்சுக்கு இடமில்லை..! எறங்கி அடிங்க….!! கம்பிர் ஆவேசம்!!
ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.மேலும் இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு இந்த கொடூரத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
அங்கு பதற்றம் நிலவிய வண்ணமே உள்ளது.இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்களும் எதிர்ப்பு குரலும் எழுந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்களும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் தனது ட்விட்டர் பதிவில், ’’இப்போது பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் – பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் அந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் போர்க்களத்தில் தான் இருக்க வேண்டும்.இதுவரை பொறுத்தது போதும் என்று ஆவேசமாக அதில் கூறியுள்ளார்.
Yes, let’s talk with the separatists. Yes, let’s talk with Pakistan. But this time conversation can’t be on the table, it has to be in a battle ground. Enough is enough. 18 CRPF personnel killed in IED blast on Srinagar-Jammu highway https://t.co/aa0t0idiHY via @economictimes
— Gautam Gambhir (Modi Ka Parivar) (@GautamGambhir) February 14, 2019