விராட் கோலி பற்றி கூறிய கவுதம் கம்பீர்.!
விராட் கோலியை பற்றி கவுதம் கம்பீர் சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பற்றி கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 20000 க்கும் மேற்பட்ட சர்வதேச ரன்கள் மற்றும் அதிக சதங்களைக் கொண்ட ஒரு வீரர் விராட் கோலி , மேலும் குறிப்பாக விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அவர் பேட்டிங்கில் மற்றும் சாதனனை படைக்காமல் கேப்டன்ஷிப்பிலும் மிகவும் சிறந்த சாதனைகளை படைத்துள்ளார்.
மேலும் விராட் கோலி சிறந்த ஒருநாள் போட்டிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள், என்ன நினைவுக்கு வருகிறது, கடந்த 2013 ஆம் ஆண்டில் ஜெய்ப்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 52 பந்துகளில் சதம் ஒரு இந்தியரின் வேகமான சதம் அவர் அடித்த அந்த சதம் தான் மேலும் , அதற்கு பிறகு 2015 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 107, 2018 இல் தென்னாப்பிரிக்காவில் அவர் ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் எடுத்தார்.
மேலும் விராட் கோலி கேப்டனாக விளையாடிய மிகச் சிறந்த ஒன்று கடந்த 2012 ஆசியக் கோப்பையின் போது டாக்காவில் இலங்கைக்கு எதிராக கோஹ்லி 133 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். மேலும் விராட் கோலி மூன்று வடிவங்களில் நம்பமுடியாத பல இன்னிங்ஸ் களை விளையாடியுள்ளார். அதில் இது விராட் கோலியின் மிகச்சிறந்த இன்னிங்ஸில் ஒன்றாகும் என்று நான் நினைக்கிறேன் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.