‘இரவு முழுவதும் அழுதேன்’ ..! இந்தியா தோல்வியை நினைவு கூர்ந்த கவுதம் கம்பீர் !
கவுதம் கம்பீர் : கடந்த 2007 ம் ஆண்டுக்கு பிறகு 17 வருடங்கள் கழித்து இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி கடுமையாக முயற்சி போராடி இந்த வெற்றியை பெற்றார்கள் என்றே கூறலாம். ஆனால், 2014 முதல் ஐசிசி தொடரின் உலகக்கோப்பை தொடர்களில் முக்கிய போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து கொண்டே வந்தது. அதனை நம்மால் மறக்க முடியாது என்றே கூறலாம்.
அதற்கு முன்னும் இந்திய அணி நடைபெற்ற சில முக்கிய போட்டிகளில் தோல்வியை தழுவி இருப்பார்கள். அதில் குறிப்பிட்டு சொன்னால் கடந்த 1992 ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் ஒரு லீக் போட்டியில் இந்திய அணியை, ஆஸ்திரேலியா அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பார்கள்.
இந்த போட்டியை நினைவு கூர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் ஒன் கிரிக்கெட் என பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சில அனுபவங்களை பகிர்ந்திருப்பார். அதில் பேசிய அவர், “கடந்த 1992 ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது எனக்கு நினைவிருக்கிறது.
மேலும், நான் அன்று இரவு முழுவதும் அழுதேன் அதுவும் எனக்கு நினைவிருக்கிறது. அதற்கு முன்னும் பின்னும் நான் அப்படி அழுததில்லை, அது ஏன் என்றும் எனக்குத் தெரியவில்லை. அப்போது எனக்கு 11 வயது தான். இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று அன்று இரவு முழுவதும் நான் அழுதேன். 1992-ல் சொன்னதை, பின் 2011-ம் ஆண்டு அந்த கனவை என்னால் நிறைவேற்ற முடிந்தது” என கூறி இருந்தார்.