இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் கிழக்கு டெல்லியின் எம்.பி.யுமான கவுதம் கம்பிர், தனது 39 ஆம் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குபவர், கவுதம் கம்பிர். இவர் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது ஓய்வினை அறிவித்தார். அதனைதொடர்ந்து 2019 ஆம் ஆண்டு, பாஜகவில் இணைந்து, தற்பொழுது கிழக்கு டெல்லியின் எம்.பி. ஆக இருந்து வருகிறார்.
கவுதம் கம்பீர், தனது கிரிக்கெட் வரலாற்றில் 242 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 10,324 ரன்களை குவித்த நிலையில், 2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை மற்றும் 2011 உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியின் வெற்றிக்குகாரணமாக இருந்தவர்.
இந்நிலையில் கவுதம் கம்பிர், இன்று தனது 39 ஆம் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அந்த பதிவில், கம்பிரின் வாழ்க்கையில் பல வெற்றிகளை அடையவும் சமூகத்திற்கு தன்னலமற்ற சேவையை தொடர்ந்து வழங்குமாறும், பிறந்தநாள் கேக்கை எங்கே எனவும் கேட்டுள்ளார். அவரைதொடர்ந்து கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பிசிசிஐ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…