கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கம்பீர் அறிவிப்பு..!!

Default Image

அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன் வீரராக திகழ்ந்த வீரர் கவுதம் காம்பீர். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றது.இந்த ஆட்டத்தில்  57 ரன்கள் அடித்து முத்திரை பதித்ததுடன் அணியின் ரன் ஸ்கோரை உயர்த்தினார். இதே போல் இந்தியா  2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியிலும் வென்றது இதில் கம்பீர் 97 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார்.
Related image
கிரிக்கெட்டில் கம்பீர் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.ஆனால் கம்பீருக்கு கடந்த சில வருடங்களாகவே சர்வதேச அணியில் இடம் அவருக்கு கிடைக்கவில்லை.இதனால் அவர் ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டார். இவர் கடைசியாக 2016-ம் ஆண்டு ராஜ்கோட்டில் இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் விளையாடினார். இப்பொழுது டெல்லி அணிக்காக உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார்.
Related image

இந்த நிலையில் இன்று தன் கிரிக்கெட் உலகில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்த ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.கம்பீர்( 37) வயதாகின்ற நிலையில் கம்பீர்  2003-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் தான் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நுழைந்தார் மேலும் அணிக்கு அன்று தான் அறிமுகம் ஆனார்.
இதுவரை இந்திய அணிக்காக 58 டெஸ்ட் மற்றும் 147 ஒருநாள் மேலும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் டெஸ்ட் போட்டியில் 22 அரைசதம் 9 சதங்களுடன் 4154 ரன்கள் எடுத்துள்ளார்.இது மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டியில் 34 அரைசதங்களுடன் 11 சதங்களுடன் 5238 ரன்கள் எடுத்த நிலையில் டி20 போட்டிகளில்  7 அரைசதங்களுடன் 932 ரன்களும் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்