“இதயத்திற்கு நலமானது” என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நடித்த விளம்பரங்கள், நெட்டிசன்கள் செயலால் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, ஜனவரி 2 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கங்குலி இதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளது என்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.
கங்குலி விரைவில் மீண்டு வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் பதிவிட்டு வருகின்றனர். தற்பொழுது சவுரவ் கங்குலி, நாளை டிஸ்சார்ச் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கங்குலி நடித்துள்ள “பார்டியுன்” எண்ணெய் நிறுவனத்தின் விளம்பரங்கள் அனைத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கங்குலி இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, “இதயத்திற்கு நலமானது” என கூறிய கங்குலிக்கே இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, அவர் நடித்த “பார்டியுன்” எண்ணெய் நிறுவனத்தின் விளம்பரங்கள் அனைத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…